2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பந்துவீச்சளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்தில் வக்னர்

Editorial   / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையால் இன்று வெளியிடப்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு, நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர் முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே, நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தை நீல் வக்னர் அடைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மிற்செல் ஸ்டார்க், 14ஆம் இடத்திலிருந்து ஒன்பது இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, இந்த டெஸ்டில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட், எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

இதுதவிர, குறித்த டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதி, 13ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. ககிஸோ றபாடா, 3. நீல் வக்னர், 4. ஜேஸன் ஹோல்டர், 5. மிற்செல் ஸ்டார்க், 6. ஜஸ்பிரிட் பும்ரா, 7. ஜொஷ் ஹேசில்வூட், 8. வேர்ணன் பிலாந்தர், 9. ஜேம்ஸ் அன்டர்சன், 10. டிம் செளதி.

இந்நிலையில், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் மேற்குறிப்பிட்ட டெஸ்டில் 193 ஓட்டங்களை பெற்ற அவுஸ்திரேலியாவின் மர்னுஸ் லபுஷைன், எட்டாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் 102 ஓட்டங்களைப் பெற்ற பாபர் அஸாம், 13ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராட் கோலி, 2. ஸ்டீவ் ஸ்மித், 3. கேன் வில்லியம்சன், 4. செட்டேஸ்வர் புஜாரா, 5. மர்னுஸ் லபுஷைன், 6. அஜின்கியா ரஹானே, 7. டேவிட் வோணர், 8. ஜோ றூட், 9. பாபர் அஸாம், 10. திமுத் கருணாரத்ன.

இந்நிலையில், நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளைப் கைப்பற்றியதுடன், 53 ஓட்டங்களையும் பெற்றிருந்த மிற்செல் ஸ்டார்க், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில், ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. இரவீந்திர ஜடேஜா, 3. பென் ஸ்டோக்ஸ், 4. வேர்ணன் பிலாந்தர், 5. மிற்செல் ஸ்டார்க்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .