2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பருவகாலத்தின் 40ஆவது கோலைப் பெற்றார் ரொனால்டோ

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 09 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியல் மட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்தப் பருவகாலத்தில் தனது 40ஆவது கோலைப் பெற்றுள்ளார். றியல் மட்ரிட் அணி, சம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற போட்டியிலேயே, அவர் இந்த மைல்கல்லை அடைந்தார்.

றியல் மட்ரிட் அணிக்கும் றோமா அணிக்குமிடையில் இடம்பெற்ற இப்போட்டியில், முதற்கட்டப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்த நிலையில், இரண்டாவது கட்டப் போட்டியில் நேற்றுக் களமிறங்கியது.

இப்போட்டியின் முதற்பாதியில் கோல்களெவையும் பெறப்பட்டிருக்கவில்லை. இரண்டாவது பாதியில், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோலொன்றைப் பெற்றதோடு, 4 நிமிடங்களில் அவ்வணியின் ஜேம்ஸ் றொட்ரிக்கஸ், மற்றொரு கோலைப் பெற்றார். இதனடிப்படையில், 2-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியை வென்றதோடு, ஒட்டுமொத்தமாக 4-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்தே, காலிறுதிப் போட்டிகளுக்கு அவ்வணி தகுதிபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .