Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 29 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமானதாகும். இதனை உணர்ந்த பலர், வயதானபோதிலும் உடற்பயிற்சி செய்வதை பழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.
அதேபோன்று உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சிலர், வயதான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, அதில் வெற்றி பெற்று சாதனையும் படைக்கிறார்கள்.
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ரெனி. இவர் தனது 53 வயதில் உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி கூடம் சென்றுள்ளார்.
அப்போதிலிருந்து அவர் பளு தூக்குதலில் போட்டிகளில் பங்கேற்க தேவையான பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் தனது 63 வயதில் மங்கோலியாவில் நடந்த சர்வதேச மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில் 61-70 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரெனி கலந்து கொண்டார்.
44 நாடுகளை சேர்ந்த 145 பேர் கலந்து கொண்ட அந்த போட்டியில் ரெனி தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.அது மட்டுமின்றி ஆலப்புழாவில் நடந்த ஆசிய பளு தூக்குதல் போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago