Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது சக அணி வீரரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் முதலாவது சுற்றில் மோதியமையையடுத்து மெர்சிடிஸ் அணியின் ஜெர்மனிய சாரதியான நிக்கோ றொஸ்பேர்க் இலகுவாக பஹ்ரெய்ன் கிரான்ட் பிறிக்ஸை வென்றார்.
மெதுவான ஆரம்பம் மற்றும் வில்லியம்ஸ் அணியின் பின்லாந்து சாரதியான வல்ட்டேரி போட்டாஸுடன் முதலாவது திருப்பத்தில் மோதியமை காரணமாக முதலாவது சுற்றில் ஏழாம் நிலைக்குச் சென்ற லூயிஸ் ஹமில்டன், பின்னர் சுதாகரித்துக் கொண்டு பந்தயத்தை தொடர்ந்தாலும் இரண்டாமிடம் பெற்ற பெராரி அணியின் பின்லாந்துச் சாரதியான கிமி ரைக்கோனனை பிடிக்க முடியவில்லை.
இந்த பஹ்ரெய்ன் கிரான்ட் பிறிக்ஸுடன் சேர்த்து, கடந்த வருடம் மெக்ஸிக்கோவிலிருந்து இது வரை தொடர்ச்சியாக ஐந்து பந்தயங்களில் வென்ற நிக்கோ றொஸ்பேர்க், லூயிஸ் ஹமில்டனை விட 17 புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.
மேற்படி பஹ்ரெய்ன் கிரான்ட் பிறிக்ஸில் நான்காமிடத்தை ரெட் புல் அணியின் அவுஸ்திரேலிய சாரதியான டேனியல் ரிக்கார்டோவும் ஐந்தாமிடத்தை ஹாஸ் எஃப்1 அணியின் பிரான்ஸ் சாரதியான றொமைன் க்ரோஸ்ஜீனும் பெற்றனர்.
13 minute ago
17 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
46 minute ago