2025 ஜூலை 16, புதன்கிழமை

பார்சிலோனாவால் ஒப்பந்தம் செய்யப்பட்டாரா கோச்சினியோ?

Editorial   / 2018 ஜனவரி 01 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் சீருடைத் தயாரிப்பாளரான நைகி, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் மத்தியகள வீரரான பிலிப் கோச்சியோவின் பெயர் சீருடையின் பின்புறம் பதித்த பார்சிலோனா சீருடைகள் குறித்து விளம்பரம் செய்துள்ளது.

இதனையடுத்து, லிவர்பூலிருந்து பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் மத்தியகள வீரரான பிலிப் கோச்சினியோ, பார்சிலோனாவால் ஒப்பந்தம் செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த பருவகாலத்தில் பார்சிலோனாவால் ஒப்பந்தம் செய்யப்பட முடியாமல் போன பிலிப் கோச்சினியோ இம்மாதம் ஒப்பந்தம் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எவ்வாறெனினும், பார்சிலோனாவின் மைதானமான காம்ப் நோவை ஒளியூட்ட பிலிப் கோச்சினியோ தயாராகுகிறார் என நைகி இணையத்தளத்தில் வெளியான விளம்பரம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .