2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பிறீமியர் லீக்: வென்றது லிவர்பூல்

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வட்போர்ட்டுடான போட்டியில் லிவர்பூல் வென்றது.

இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே கோலொன்றைப் பெற்ற லிவர்பூலின் மொஹமட் சாலா, ஆரம்பத்திலேயே தனது அணிக்கு முன்னிலையை வழங்கியதுடன், பின்னர் போட்டியின் முதற்பாதி முடிவடைய இரண்டு நிமிடங்களிருக்கையில் சக வீரர் அன்டி றொபேர்ட்சனிடமிருந்து வந்த பந்தை கோலாக்கி முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

பின்னர் இரண்டாவது ஆரம்பித்த நான்காவது நிமிடத்தில் மொஹமட் சாலா வழங்கிய பந்தை றொபேர்ட்டோ பெர்மினோ கோலாக்க்கவும் போட்டியின் 77, 85ஆவது நிமிடங்களில் மீண்டும் மொஹமட் சாலா கோல்களைப் பெறவும் இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .