2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘பேல் விரைவில் வெளியேறுவாரென நம்புகிறோம்’

Editorial   / 2019 ஜூலை 22 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகாமான றியல் மட்ரிட்டுடனான, அக்கழகத்தின் முன்களவீரரான கரெத் பேலின் காலம் ஏறத்தாழ நிச்சயமாக முடிவுக்கு வருகின்றது எனக் கருதப்படுகிறது.

ஏனெனில், 30 வயதான பேலை வெளியேற்றுவது குறித்து பணியாற்றுவதாக றியல் மட்ரிட்டின் முகாமையாளர் ஸினடி ஸிடன் வெளிப்படுத்தியுள்ளார்.

பயேர்ண் மியூனிச்சுடனான சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் நேற்று முன்தின றியல் மட்ரிட்டின் போட்டியில் பேல் சேர்க்கப்படாத நிலையில் அதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “பேல் கழகத்தை விட்டு வெளியேறுவதை மிகவும் நெருங்குவதலாயே அவர் விளையாடவில்லை. அவர் விரைவில் வெளியேறுவார் என நாங்கள் நம்புகின்றோம். அவரைப் புதிய அணிக்கு மாற்றுவது குறித்து நாங்கள் பணியாற்றுகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பேலைக் கைச்சாத்திடுவதற்கான போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் இல்லை என்ற நிலையில், இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், பேலைக் கைச்சாத்திடுவதற்கான ஒப்பந்த வாய்ப்பொன்றை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

றியல் மட்ரிட்டுடன் 2022ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தமொன்றைக் கொண்டிருக்கும் பேல், கடந்த பருவகாலத்தில் 42 போட்டிகளில் விளையாடியிருந்தபோதும், 21 போட்டிகளையே ஆரம்பித்திருந்தார். கடந்த நான்கு பருவகாலங்களில் விளையாடியிருக்கக்கூடிய 151 லா லிகா போட்டிகளில் 79 போட்டிகளையே காயம் காரணமாக பேல் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .