Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லிவர்பூல் ஆகிய அணிகள் வென்றுள்ளதுடன், மன்செஸ்டர் சிற்றி, நாப்போலி, மொனாக்கோ ஆகிய அணிகள் தோற்றுள்ளன.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 3-2 என்ற கோல் கணக்கில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரிசியா டொட்டமுண்டை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக பொர்ஜா மயோரல், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகாஸ் வஸ்கூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரிசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 3-0 என்ற கோல் கணக்கில், சைப்ரஸ் கழகமான அப்போயல் நிக்கோசியாவை வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, பெர்ணான்டோ லொரென்டே, சொன் ஹியூங் மென், ஜோர் கெவின் குடு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அந்தவகையில் குறித்த குழுவின் வெற்றியாளர்களாக டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் இரண்டாமிடம் பெற்ற அணியாக றியல் மட்ரிட்டும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.
இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், 7-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யக் கழகமான ஸ்பார்டக் மொஸ்கோவை வென்றது. லிவர்பூல் சார்பாக, பிலிப்பி கூட்டின்யோ மூன்று கோல்களையும் சாடியோ மனே இரண்டு கோல்களையும் றொபேட்டோ பெர்மினோ, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை, இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, 1-2 என்ற கோல் கணக்கில் உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ்க்கிடம் தோல்வியுற்றது. ஷக்தார் டொனெஸ்க் சார்பாக, பேர்னார்ட், இஸ்மைலி கொன்கல்வேஸ் டொஸ் சன்டோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை சேர்ஜியோ அகுரோ பெற்றார். அந்தவகையில், குறித்த குழுவின் வெற்றியாளர்களான மன்செஸ்டர் சிற்றியுடன் ஷக்தார் டொனெஸ்க் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குச் செல்கிறது.
இத்தாலிய சீரீ ஏ கழகமான நாப்போலி, 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தின் பெய்னூர்ட்டிடம் தோல்வியடைந்தது. அந்தவகையில், சம்பியன்ஸ் லீக்கிலிருந்து நாப்போலி வெளியேற்றப்பட்டுள்ளது.
பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோ, 2-5 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் கழகமான போர்ட்டோவிடம் தோற்று சம்பியன்ஸ் லீக்கிலிருந்து வெளியேறியுள்ளது.
ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லா, ஸ்லோவேனியாக் கழகமான மரிபோருக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அந்தவகையில், குறித்த குழுவில் முதலிடம் பெற்ற லிவர்பூலுடன் செவில்லாவும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குச் செல்கிறது.
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025