Shanmugan Murugavel / 2025 மே 04 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை டெக்லான் றைஸ் பெற்றதோடு, போர்ண்மெத் சார்பாக டீன் ஹுஜிசென், இவான்சிலன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற இப்ஸ்விச் டெளணுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் சமப்படுத்தியது. எவெர்ற்றன் சார்பாக பெட்டோ, டிவைட் மக்நீல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இப்ஸ்விச் டெளண் சார்பாக ஜூலியோ என்சிஸ்கோ, ஜோர்ஜ் ஹிர்ஸ்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
15 minute ago
3 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
27 Mar 2026