Shanmugan Murugavel / 2026 ஜனவரி 25 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், போர்ண்மெத்தின் மைதானத்தில் சனிக்கிழமை (24) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் தோற்றது.
லிவர்பூல் சார்பாக வேர்ஜில் வான் டிஜிக், டொமினிக் ஸபோஸ்லாய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். போர்ண்மெத் சார்பாக எவானில்சன், அலெக்ஸ் ஜிமெனெஸ், அமின் அட்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை பேண்லியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. டொட்டென்ஹாம் சார்பாக மிக்கி வான் டி வென், கிறிஸ்டியன் றொமெரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பேண்லி சார்பாக அக்ஸெல் துவான்ஸெபே, லைல் பொஸ்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. 46 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், 43 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அஸ்தன் வில்லாவும், 36 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லிவர்பூலும் காணப்படுகின்றன. இதில் வில்லா மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
22 minute ago
25 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
25 minute ago
41 minute ago
49 minute ago