2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போர்த்துக்கல்லின் பயிற்றுவிப்பாளராக றொபேர்ட்டோ மார்டினெஸ்

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 10 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பெல்ஜியத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் றொபேர்ட்டோ மார்ட்டினெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணத்தில் மொரோக்கோவிடம் தோற்று காலிறுதிப் போட்டியோடு போர்த்துக்கல் வெளியேறியதைத் தொடர்ந்து போர்த்துக்கல்லின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பெர்ணாண்டோ சன்டோஸ் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

முன்னதாக குழுநிலைப் போட்டிகளோடு பெல்ஜியம் வெளியேறியதோடு, மார்ட்டினெஸ் பதவி விலகியிருந்தார்.

இதேவேளை, போர்த்துக்கல்லின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் எதிர்காலம் குறித்து அவருடன் கலந்துரையாடவுள்ளதாக மார்ட்டினெஸ் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X