2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மோசடி தொடர்பில் பிரேசிலில் நேமரிடம் விசாரணை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பிரேசிலின் தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவரும் ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் நட்சத்திரவீரருமான நேமர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பார்சிலோனாவுக்கு 2013ஆம் ஆண்டு செல்ல முன்னர், வரி செலுத்துவதில் மோசடி செய்ததாக நேமரின் மீது குற்றஞ்சுமத்தப்படவேண்டும் என பிரேசிலுள்ள வழக்குத் தொடருநர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேற்படிக் குற்றச்சாட்டுக்கள், 2006ஆம் ஆண்டிலிருந்து, அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள்ளேயே உள்ளடங்கவதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறைவான வரியை நேமர் செலுத்தும் வகையில், நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.  

இதேவேளை, இது தவிர, பிறிதொரு வழக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை (02) ஸ்பெயினில் விசாரிக்கப்பட்டிருந்தது. பார்சிலோனா அணிக்கு சென்றமையில் உள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே மட்ரிட்டில் உள்ள நீதிமன்றமொன்றில் ஒன்றரை மணித்தியாலங்கள் நேமர் தோன்றியிருந்தார். தவிர, நேமரின் முகவராகச் செயற்பட்ட அவரின் தந்தை ட சில்வா சாண்டோஸும் நேமருடன் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தார்.

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு நேமருக்கு 57 மில்லியன் யூரோ வழங்கப்பட்டதாக பார்சிலோனா தெரிவிக்கின்ற நிலையில், நேமருக்கு 83 மில்லியன் யூரோ வழங்கியதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .