2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முத்தரப்புத் தொடர்: இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 22 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு, அவுஸ்திரேலிய அணி தகுதிபெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக பார்படோஸில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்றே, இறுதிப் போட்டிக்கு அவ்வணி தகுதிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மே.தீவுகள் அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், பின்னர் சிறப்பாக விளையாடி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மார்லன் சாமுவேல்ஸ் 125 (134), டினேஷ் ராம்டின் 91 (92) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மிற்சல் ஸ்டார்க் 3, ஜேம்ஸ் போக்னர் 2, ஸ்கொட் பொலண்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

283 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் மிற்சல் மார்ஷ் ஆட்மிழக்காமல் 79 (85), ஸ்டீவன் ஸ்மித் 78 (107), கிளென் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 46 (26) ஓட்டங்களைப் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாக, மார்லன் சாமுவேல்ஸ் தெரிவானார்.

இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் மற்றைய அணியைத் தெரிவுசெய்வதற்கான போட்டியாக, மே.தீவுகள், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .