Shanmugan Murugavel / 2016 ஜூலை 01 , பி.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணத்தில், பெல்ஜியத்துக்கெதிரான காலிறுதிப் போட்டியில் ஒரு கோல் பின்தங்கியிருந்ததிலிருந்து வெற்றி பெற்று, பெரிய தொடரொன்றில் முதற் தடவையாக அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்து, தமது கால்பந்தாட்ட வரலாற்றின் மிகச் சிறந்த தருணத்தை வேல்ஸ் பதிவு செய்து கொண்டது.
இரண்டு அணிகளுக்கும் பல கோல் போடும் வாய்ப்புகள் கிடைத்த போட்டியின் முதலாவது பாதியின் 13ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ரட்ஜா நைன்குலன் பெற்ற கோலின் மூலம் அவ்வணி முன்னிலை பெற்றபோதும், போட்டியின் 30ஆவது நிமிடத்தில், ‘கோணர்’ ஒன்றின் மூலம் கிடைத்த பந்தை தலையால் முட்டி கோலாக்கி, கோல் எண்ணிக்கையை வேல்ஸ் அணியின் தலைவர் ஆஷ்லி வில்லியம்ஸ் சமப்படுத்தினார்.
அதன்பின்னர் போட்டியின் 55ஆவது நிமிடத்தில் வேல்ஸின் ஹல் றொப்சன் காணு பெற்ற அபாரமான கோலினால் வேல்ஸ் முன்னிலை பெற்றதுடன், போட்டியின் 85ஆவது நிமிடத்தில் சாம் வோக்ஸ் பெற்ற கோலின் மூலமாக தனது வெற்றியை உறுதிப்படுத்திய வேல்ஸ், 3-1 என்ற கோல்கணக்கில் இறுதியில் வென்றது.
மேற்படி போட்டியில் வென்றதன் மூலம், எதிர்வரும் புதன்கிழமை (06) இடம்பெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில், போர்த்துக்கல்லுடன் வேல்ஸ் மோதவுள்ள போட்டியானது, உலகின் பணக்கார கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட் அணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரித் பேல் ஆகியோருக்கிடையிலான மோதலாக மாறியுள்ளது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago