Shanmugan Murugavel / 2016 மார்ச் 29 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் முதல் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸும் உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மறேயும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முப்பத்து நான்கு வயதான செரினா வில்லியம்ஸ், 6-7 (3-7), 6-1, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் பத்தொன்பதாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் சுவிற்லோனா குஸ்நெட்சோவாவிடம் நான்காவது சுற்றில் தோல்வியடைந்தார்.
கடந்த 2012ஆம் முதல் மியாமி பகிரங்கப் போட்டிகளில் தோல்வியடைந்திருக்காத செரினா வில்லியம்ஸ், இம்முறை, ஒன்பதாவது தடைவையாக மியாமி பகிரங்கப் பட்டத்தை கைப்பற்ற எதிர்பார்த்திருந்த நிலையில், வரலாற்றில், வேகமாக தொடரிலிருந்து வெளியேறியிருந்தார்.
தவிர, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்கினியன்ஸ்கா ரட்வன்ஸ்காவும் 2-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் இருபதாம் நிலை வீராங்கனையான சுவிற்ஸர்லாந்தின் திமியா பச்சென்ஸ்கியிடம் தோல்வியுற்றார்.
இதேவேளை, அன்டி மறே, 6-7 (1-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் உலகின் 28ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகொர் டிமிற்றோவ்விடம் மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்தார்.
16 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago