2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மொரின்ஹோவை நீக்குவது முட்டாள்தனம்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்சி அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோவை, அப்பதவியிலிருந்து நீக்குவது முட்டாள்தனமாக அமையுமென, மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முன்னாள் முகாமையாளர் சேர் அலெக்ஸ் பேர்ஹூஸன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி அணி, புள்ளிகளின் பட்டியலில் 14ஆவது இடத்தில் காணப்படுவதோடு, 15 போட்டிகளில் எட்டில் தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக, அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து மொரின்ஹோ நீக்கப்படலாமென்ற கருத்து நிலவுகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள சேர் அலெக்ஸ், 'வரலாற்றில் மிகச்சிறந்த பயிற்றுநர்களில் ஒருவரை, அப்பதவியிலிருந்து நீக்குவதில் பிரயோசனமேதுமில்லை. அவர் (அணியின் உரிமையாளர் றோமன் அப்ராமோவிச்), கடந்த 10 வருடங்களில் ஏராளமான பயிற்றுநர்களை நீக்கியுள்ளார். அதிலிருந்து அவர், பாடங்களைக் கற்றிருப்பார் என நம்புகிறேன்" என்றார்.

'மொரின்ஹோவை நீக்குவது, முட்டாள்தனமாக அமையும். அது, பிழையான முகாமைத்துவமாக அமையும்" எனவும் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .