Shanmugan Murugavel / 2016 ஜனவரி 07 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் விளையாடியிருந்த நிலையில், இத்தொடரை, 2-0 என்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இத்தொடரில், இன்று முடிவுக்கு வந்திருந்த 3ஆவது டெஸ்ட் போட்டி, மழை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முற்றிலுமாக 150.1 ஓவர்களே வீசக்கூடியதாக இருந்தது.
இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, தனது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக, கிரேய்க் பிராத்வெயிட் 85, கார்லோஸ் பிராத்வெயிட் 69, டினேஷ் ராம்டீன் 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில், அவுஸ்திரேலியா சார்பாக ஸ்டீவ் ஓஃப் கெவி, நேதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் பற்றின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியபோது, போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டுவர இரு அணிகளின் தலைவர்களும் இணங்கியிருந்தனர்.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக 122 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற டேவிட் வோணர், சிட்னி மைதானத்தில் டெஸ்ட் போட்டியோன்றில் குறைந்த பந்துகளில் (82) சதம் பெற்றவர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். வீழ்த்தப்பட்ட இரண்டு விக்கெட்டுகளையும் ஜோமெல் வொரிக்கான் கைப்பற்றியிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக டேவிட் வோணரும், தொடரின் நாயகனாக அடம் வொஜஸும் தெரிவாகினர்.
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago