Shanmugan Murugavel / 2016 ஜனவரி 11 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, போட்டிகளில் பங்குபற்றத் தடை விதிக்கப்பட்டு, தற்போது தடைக்காலம் முடிவடைந்த சல்மான் பட்டும் மொஹமட் ஆசிப்பும் மீண்டும் போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்துள்ளனர். இவர்களிருவருமே, ஒரே போட்டியிலேயே தங்கள் மீள்வருகையைப் பதிவுசெய்தனர்.
தேசிய ஒருநாள் கிண்ணம் என்ற தொடரின் குழு பி போட்டியில், கூட்டாட்சியில் நிர்வகிக்கப்படும் பழக்குடிப் பகுதிகள் அணிக்கும் நீர் மற்றும் சக்தி அபிவிருத்தி அதிகாரசபை அணிகளுக்கான போட்டியிலேயே, இவர்களிருவரும் பங்குபற்றினர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய நீர் மற்றும் சக்தி அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணியின் சல்மான் பட், 143 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களைக் குவித்தார்.
பதிலளித்தாடிய பழக்குடிப் பகுதி அணி, 136 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் மொஹமட் ஆசிப், 6 ஓவர்கள் பந்துவீசி, 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்ட மூவரில் இளையவரான மொஹமட் ஆமிர், ஏற்கெனவே பாகிஸ்தான் அணியில் விளையாடத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், 31 வயதான சல்மான் பட், 33 வயதான மொஹமட் ஆசிப் ஆகியோர், அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கு, ஆமிரை விடச் சவாலை எதிர்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago