Editorial / 2026 மார்ச் 20 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் வியாழக்கிழமை (19) அன்று பாடசாலை மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
பாடசாலை அதிபர் ச. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக துணுக்காய் கல்வி வலய உடற்கல்விப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் T. புஸ்பரட்னம் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக பாடசாலையின் முன்னாள் பதில் அதிபரும் யாழ். ஹார்ட்லி கல்லூரி ஆசிரியருமான சி. நிமலன், பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியருமான திருமதி ச. ஜெயலலிதா, பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபரும் மு/பண்டாரவன்னியன் மகா வித்தியாலய ஆசிரியருமான மா. ரதிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மாங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் இவ்விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
குறித்த விளையாட்டுப் போட்டியின் போது மாணவர்களுக்கிடையிலான பல்வேறு மெய்வல்லுநர் போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றதுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.








































6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago