2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

மத்திய வரிசையில் விளையாடுவது சிறப்பானது

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 07 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோணர், மத்திய வரிசையில் விளையாடும் தனது புதிய பாத்திரத்தை, மிகச்சிறப்பானதொன்று என வர்ணித்துள்ளார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோணர், அவுஸ்திரேலியா சார்பாக இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடியிருந்த நிலையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரில் மத்திய வரிசையில் பங்குபற்றுகிறார். முதலாவது போட்டியில் 3ஆம் இலக்கத்திலும் இரண்டாவது போட்டியில் 4ஆம் இலக்கத்திலும் துடுப்பெடுத்தாடியிருந்தார்.

சுழற்பந்து வீச்சைச் சிறப்பாக விளையாடும் திறனைக் கொண்ட டேவிட் வோணர், மத்திய வரிசையில் வருவதன் மூலம், சுழற்பந்து வீச்சாளர்களை அடித்து விளையாடும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது, அணித்தலைவர், பயிற்றுநர், தேர்வாளர்கள் ஆகியோரின் கலந்துரையாடல் காரணமாக ஏற்பட்ட முடிவாகும். மத்திய வரிசையில் விளையாடுவதைச் சிறப்பானது எனத் தெரிவித்த அவர், 2ஆவது போட்டியில் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரை அடித்தாட முடிந்ததாகத் தெரிவித்தார்.

கிளென் மக்ஸ்வெல்லும் டேவிட் வோணரும் அடித்தாடி, தென்னாபிரிக்கா விதித்த 205 என்ற இலக்கை, 20ஆவது ஓவரின் இறுதிப் பந்தில், அவுஸ்திரேலிய அணி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .