Editorial / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டெல்லியில் நேற்று முன்தினம் ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டின் இன்றைய மூன்றாவது நாளில் இலங்கை போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்களைப் பெற்று பொலோ ஒன்னைத் தவிர்த்ததுடன், இந்திய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 180 ஓட்டங்களே தற்போது பின்தங்கியுள்ளது.
தற்போது களத்தில், தினேஷ் சந்திமால் 147, லக்ஷான் சந்தகான் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழக்காமல் உள்ளனர். அஞ்சலோ மத்தியூஸ் 111 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின் 3, இரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, தமது முதலாவது இனிங்ஸில், 7 விக்கெட்டுகளை இழந்து 536 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் விராட் கோலி 243, முரளி விஜய் 155 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லக்ஷான் சந்தகான் 4, லஹிரு கமகே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
31 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
5 hours ago
5 hours ago