Shanmugan Murugavel / 2016 மார்ச் 06 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த சனிக்கிழமை (05) இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, லெய்செஸ்டர், வெஸ்ட் ஹாம், பௌர்ண்மௌத், சுவான்சீ ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன் ஆர்சனல், டொட்டேன்ஹாம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் செல்சி, ஸ்டோக் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சௌதாம்டன், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.
மன்செஸ்டர் சிற்றி, அஸ்டன் வில்லா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றது. இப்போட்டியின் 48ஆவது நிமிடத்தில் யாயா தோரேயும் 50ஆவது, 60ஆவது நிமிடங்களில் சேர்ஜியோ அக்ரோவும் 66ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டேர்லிங்கும் கோல்களைப் பெற்றனர்.
இதேவேளை, ஆர்சனல், டொட்டேன்ஹாம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதில் ஆர்சனல் சார்பாக 39ஆவது நிமிடத்தில் அன்ரூ றம்ஸீயும் 76ஆவது நிமிடத்தில் அலெக்ஸிஸ் சந்தேஸும் கோல்களைப் பெற்றிருந்தனர்.
செல்சி, ஸ்டோக் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. செல்சி சார்பாக பெறப்பட்ட கோலை பேர்ட்றண்ட் ட்ரரோரே பெற்றிருந்தார்.
இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 1-0 என்ற கோல்கணக்கில் வட்போர்ட்டை லெய்செஸ்டர் வென்றதுடன், 3-2 என்ற கோல்கணக்கில் எவெர்ற்றனை வெஸ்ட் ஹாம் தோற்கடித்ததுடன், 3-1 என்ற கோல்கணக்கில் நியூகாசிலை பௌர்ண்மௌத் தோற்கடித்ததுடன், 1-0 என்ற கோல்கணக்கில் நோர்விச்சை சுவான்ஸீ தோற்கடித்தது. இது தவிர, சௌதாம்டன், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
14 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago