2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மன்செஸ்டர் யுனைட்டெட் நகர்வை பூர்த்தி செய்தார் இப்ராஹிமோவிச்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 01 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒப்பந்த முடிவுற்றிருந்த முன்கள வீரரான ஸல்டான் இப்ராஹிமோவிக்கை ஒரு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நகர்வை, இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் பூர்த்தி செய்துள்ளது.

34 வயதான இப்ராஹிமோவிக், 116 போட்டிகளில் சுவீடனுக்காக ஆடியுள்ளதுடன், கடந்த பருவகால முடிவில், பிரெஞ்சு கால்பந்தாட்ட சம்பியனான பரிஸ் செய்ண்ட் ஜெர்மைனிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள இப்ராஹிமோவிக், மன்செஸ்டர் யுனைட்டெட்டுடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், பிறீமியர் லீக்கில் விளையாடுவதை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா, ஜூவென்டஸ் கழகங்களுக்காகவும் முன்னர் ஆடிய இப்ராஹிமோவிக், 677 போட்டிகளில் 392 கோல்களைப் பெற்றதுடன், 2001ஆம் ஆண்டிலிருந்து, 13 லீக் பட்டங்கள் உள்ளடங்கலாக ஒவ்வொரு வருடமும் பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்த பருவகாலமே இப்ராஹிமோவிக்கு சிறந்த பருவகாலமாக அமைந்திருந்தது. பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் சாதனையாக 51 போட்டிகளில் 50 கோல்களைப் பெற்றிருந்தோடு, லீக்கில் 38 கோல்களையும் பெற்றிருந்தார். அதுவும் அக்கழக சாதனையென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .