Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் லெய்செஸ்டர் சிற்றியும் வெற்றி பெற்றுள்ளன.
மன்செஸ்டர் யுனைட்டெட், எவெர்ற்றன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை, போட்டியின் 54ஆவது நிமிடத்தில் அந்தோனி மார்ஷியல் பெற்றிருந்தார். இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் மன்செஸ்டர் யுனைட்டெட் 53 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. நான்காவது இடத்தில் 54 புள்ளிகளுடன் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகிறது.
இதேவேளை, லெய்செஸ்டர் சிற்றி, சௌதாம்டன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியிலும் 1-0 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை லெய்செஸ்டர் சிற்றியின் தலைவர் வெஸ் மோர்கன் பெற்றிருந்தார். இப்போட்டியில் பெறப்பட்ட வெற்றியுடன் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 69 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள லெய்செஸ்டர் சிற்றி, இரண்டாமிடத்தில் உள்ள டொட்டேன்ஹாமுக்கும் தனக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை ஏழாக அதிகரித்துக் கொண்டது. இந்நிலையில், எஞ்சியிருக்கும் போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றாலே, இப்பருவகாலத்துக்கான இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
15 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
1 hours ago