2025 ஜூலை 19, சனிக்கிழமை

மிலன் – ஜுவென்டஸ் போட்டி சமநிலை

Editorial   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள இன்டர் மிலன், நடப்பு சீரி ஏ சம்பின்களான ஜுவென்டஸுக்கிடையே நேற்று இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெற்றிருக்கவில்லை.

இப்போட்டியில் ஜுவென்டஸின் மரியோ மண்டுஸிக்கின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டிருந்ததுடன், இவரின் பல உதைகளை இன்டர் மிலனின் கோல் காப்பாளர் சமிர் ஹன்டனோவிக் தடுத்திருந்தார்.

இந்நிலையில், நடப்பு பருவகாலத்தில் அதிக கோல்களைப் பெற்றவரான இன்டர் மிலனின் அணித்தலைவர் மெளரோ இகார்டியின் உதையொன்றை ஜுவென்டஸின் கோல் காப்பாளர் தடுத்திருந்ததுடன், வேறு எந்த கோல் பெறும் சந்தர்ப்பங்களை அவர் உருவாக்கியிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X