2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

முதலாமிடத்துக்கு முன்னேறிய அடில் ரஷீட்

Mayu   / 2023 டிசெம்பர் 21 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் அடில் ரஷீட் முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் மூன்று போட்டிகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி
முதலாமிடத்தையடைந்துள்ளார். மேற்குறித்த போட்டிகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மே. தீவுகளின் சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொஸைன், ஒன்பதாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் தப்ரையாஸ் ஷம்சி, 12ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. அடில் ரஷீட், 2. ரஷீட் கான், 3. ரவி பிஷ்னோய், 4. வனிடு ஹஸரங்க, 5. மகேஷ் தீக்‌ஷன, 6. அகீல் ஹொஸைன், 7. பஸல்ஹக் பரூக்கி, 8. முஜீப் உர் ரஹ்மான், 9. தப்ரையாஸ்  ஷம்சி, 10. ஹொஷ் ஹேசில்வூட்.

இந்நிலையில், மேற்கூறப்பட்ட இங்கிலாந்துக்கெதிரான முதல் மூன்று போட்டிகளில் 112 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் பிரண்டன் கிங், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 12ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. சூரியகுமார் யாதவ், 2. மொஹமட் றிஸ்வான், 3. ஏய்டன் மார்க்ரம், 4. பாபர் அஸாம், 5. றீலி றொஸோ, 6. பிரண்டன் கிங், 7. ருத்துராஜ் கைகவாட், 8. ஜொஸ் பட்லர், 9. டேவிட் மலன்,  10. றீஸா ஹென்ட்றிக்ஸ்.

இதேவேளை இந்தியாவுக்கெதிரான மேற்கூறப்பட்ட இறுதி இரண்டு போட்டிகளில் 55 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் ஏய்டன்
மார்க்ரம், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. ஏய்டன் மார்க்ரம், 4. ஹர்டிக் பாண்டியா, 5. சிகண்டர் ராசா.

இந்நிலையில், சிம்பாப்வேக்கெதிரான இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 54 ஓட்டங்களைப் பெற்ற அயர்லாந்தின் ஹரி டெக்டர், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில்
எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. பாபர் அஸாம், 2. ஷுப்மன் கில், 3. விராட் கோலி, 4. றோஹித் ஷர்மா, 5. டேவிட் வோர்னர், 6. டரைல் மிற்செல், 7. ஹரி டெக்டர், 8. றஸி வான் டர் டுஸன், 9. டேவிட் மலன், 10. ஹென்றிச் கிளாசென்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. கேஷவ் மஹராஜ், 2. ஜொஷ் ஹேசில்வூட், 3. மொஹமட் சிராஜ், 4. அடம் ஸாம்பா, 5. ஜஸ்பிரிட் பும்ரா, 6. ரஷீட் கான், 7. ட்ரெண்ட் போல்ட், 8. குல்தீப் யாதவ், 9. ஷகீன் ஷா அஃப்ரிடி, 10. மொஹமட் நபி.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. சிகண்டர் ராசா, 4. ரஷீட் கான், 5. கிளென் மக்ஸ்வெல்


இதேவேளை, பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 131 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. கேன் வில்லியம்ஸன், 2. ஜோ றூட், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. உஸ்மான் கவாஜா, 5. பாபர் அஸாம், 6. ட்ரெவிஸ் ஹெட், 7. டரைல் மிற்செல், 8. மர்னுஸ் லபுஷைன், 9. ஹரி ப்ரூக், 10. றோஹித் ஷர்மா.

மேற்படி போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ், பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி
மூன்றாமிடத்தையடைந்துள்ளார். இப்போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் நேதன் லையன் எட்டாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி
ஐந்தாமிடத்தையடைந்துள்ளார். இதே போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க், 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார். இப்போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் ஜொஷ் ஹேசில்வூட், 12ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி
10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. இரவிச்சந்திரன் அஷ்வின், 2. ககிஸோ றபாடா, 3. பற் கமின்ஸ், 4. இரவீந்திர ஜடேஜா, 5. நேதன் லையன், 6. ஒலி றொபின்ஸன், 7. ஜேம்ஸ் அன்டர்சன், 8. மிற்செல் ஸ்டார்க், 9. பிரபாத் ஜெயசூரிய, 10. ஜொஷ் ஹேசில்வூட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X