Shanmugan Murugavel / 2023 ஜனவரி 25 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, இந்தூரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்று 3-0 என நியூசிலாந்தை வெள்ளையடித்தமையைத் தொடர்ந்தே தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இந்தியா: 385/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 112 (78), றோஹித் ஷர்மா 101 (85), ஹர்டிக் பாண்டியா 54 (38), விராட் கோலி 36 (27), ஷர்துல் தாக்கூர் 25 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளையர் டிக்னர் 3/76, ஜேக்கப் டஃபி 3/100, மிஷெல் பிறேஸ்வெல் 1/51, லொக்கி பெர்கியூசன் 0/53, மிற்செல் சான்ட்னெர் 0/58)
நியூசிலாந்து: 295/10 (41.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவொன் கொன்வே 138 (100), ஹென்றி நிக்கொல்ஸ் 42 (40), மிற்செல் சான்ட்னெர் 34 (29), மிஷெல் பிறேஸ்வெல் 26 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 3/45, குல்டீப் யாதவ் 3/62, யுஸ்வேந்திர சஹால் 2/43, ஹர்டிக் பாண்டியா 1/37, உம்ரான் மலிக் 1/52)
போட்டியின் நாயகன்: ஷர்துல் தாக்கூர்
தொடரின் நாயகன்: ஷுப்மன் கில்
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago