2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்டில் பங்களாதேஷை வீழ்த்திய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 30 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் வென்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், சட்டோகிராமில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளை விக்கெட் இழப்பின்றி 109 ஓட்டங்களுடன் தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், அபிட் அலி, அப்துல்லாஹ் ஷஃபிக்கின் தொடர்ந்த இணைப்பாட்டம் மூலம் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தது.

ஷஃபிக் 73, அலி 91 ஓட்டங்களுடன் குறிப்பிட்ட இடைவெளிகளில் மெஹிடி ஹஸன் மிராஸ், தஜியுல் இஸ்லாமிடம் வீழ்ந்தபோதும், அஸார் அலி, அணித்தலைவர் பாபர் அஸாமின் இணைப்பாட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. களத்தில் அலி 24, அஸாம் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக அபிட் அலி தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 330/10 (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 114, முஷ்பிக்கூர் ரஹீம் 91, மெஹிடி ஹஸன் மிராஸ் ஆ.இ 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 5/51, பாஹீம் அஷ்ரப் 2/54, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/70, சஜிட் கான் 1/79)

பாகிஸ்தான்: 286/10 (துடுப்பாட்டம்: அபிட் அலி 133, அப்துல்லா ஷஃபிக் 52, பாஹீம் அஷ்ரப் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 7/116, எபொடொட் ஹொஸைன் 2/47, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/68)

பங்களாதேஷ்: 157/10 (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 59, யாசிர் அலி 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 5/32, சஜிட் கான் 3/33, ஹஸன் அலி 2/52)

பாகிஸ்தான்: 203/2 (துடுப்பாட்டம்: அபிட் அலி91, அப்துல்லா ஷஃபிக் 73, அஸார் அலி ஆ.இ 24, பாபர் அஸாம் ஆ.இ 13 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 1/59, தஜியுல் இஸ்லாம் 1/89)

போட்டியின் நாயகன்: அபிட் அலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X