2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா காணப்படுகின்றது.

நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில், நாக்பூரில் இன்று ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அவுஸ்திரேலியா சார்பாக சுழற்பந்துவீச்சாளர் டொட் முர்பி அறிமுகத்தை மேற்கொண்டதுடன், இந்தியா சார்பாக விக்கெட் காப்பாளர் ஶ்ரீகர் பாரத் அறிமுகத்தை மேற்கொண்டதுடன், டெஸ்ட் போட்டிகளில் சூரியகுமார் யாதவ் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். அவுஸ்திரேலிய அணியில் ட்ரெவிஸ் ஹெட் இடம்பெறவில்லை. பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மர்னுஸ் லபுஷைன் 49, ஸ்டீவன் ஸ்மித் 37, அலெக்ஸ் காரி 36, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா 5, இரவிச்சந்திரன் அஷ்வின் 3, மொஹமட் ஷமி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா, இன்றைய முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், அணித்தலைவர் றோஹித் ஷர்மா 56 ஓட்டங்களுடனும், இரவிச்சந்திரன் அஷ்வின் ஓட்டமெதுவும் பெறாமலும் உள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை முர்பி கைப்பற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .