2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 21 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் இன்று ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையின் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.  

இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக துடுப்பாட்டவீரர் ஜெரெமி சொலொஸனோ அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை கருணாரத்ன, பதும் நிஸங்கவின் சத இணைப்பாட்டத்தில் நிதானமான ஆரம்பத்தைப் பெற்றது. பின்னர் 56 ஓட்டங்களுடன் நிஸங்க, ஷனொன் கப்ரியலிடம் வீழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து வந்த ஒஷாத பெர்ணான்டோ, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் றொஸ்டன் சேஸிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.

எனினும், அடுத்து வந்த தனஞ்சய டி சில்வா, கருணாரத்ன இணைப்பாட்டத்தில் நேற்றைய முதல்நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 267 ஓட்டங்களைப் பெற்று முன்னிலையில் இலங்கை காணப்படுகின்றது.

தற்போது களத்தில், கருணாரத்ன 132, டி சில்வா 56 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

இந்நிலையில், கருணாரத்னவின் துடுப்பிலிருந்து சென்ற பந்தொன்று, துடுப்புக்கு அருகில் இடது பக்கம் நின்ற சொலொஸனோவின் தலைக்கவசத்தில் தாக்கியிருந்தது.

அந்தவகையில், களத்திலிருந்து படுக்கையில் தூக்கிச் செல்லப்பட்ட சொலோஸனோ, ஸ்கான்களுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சொலோஸனோவின் ஸ்கான்களில் எதுவித கட்டமைப்பு சேதமும் இல்லை எனத் தெரிவித்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை, எனினும் கண்காணிப்புக்காக வைத்தியசாலையில் நேற்றிரவு வைக்கப்பட்டிருப்பார் எனக் குறிப்பிட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .