Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களால் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது.
இரு அணிகளினதும் சர்வதேச டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதல் தொடராக அமைந்த இந்த தொடர் 14ஆம் திகதி காலியில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், முதல் இன்னிங்ஸிற்காக 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தனது முதன் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 267 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 18 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 285 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து 268 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 04 விக்கட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை பெற்று வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது.
காலி மைதானத்தில் இதற்கு முன்னர் 2014ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 99 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த மைதானத்தில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 93 என்ற வெற்றியிலக்கினை அடைந்திருந்தது.
29 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago