Freelancer / 2024 மார்ச் 13 , பி.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
சிட்டகொங்கில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றது.
256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்படி 03 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலையில் உள்ளது. R
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026