Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 11 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் நியூசிலாந்து வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மிஷெல் பிறேஸ்வெல் (2), மிற்செல் சான்ட்னெர் (2), இஷ் சோதி (1), டிம் செளதிடம் (2) குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு 131 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, பின் அலென்னின் 62 (42), டெவோன் கொன்வேயின் ஆட்டமிழக்காத 49 (46) ஓட்டங்களோடு 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக மிஷெல் பிறேஸ்வெல் தெரிவானார்.
6 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago