Shanmugan Murugavel / 2026 ஜனவரி 28 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 25 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய பாண்டியா இரண்டாம், மூன்றாம் போட்டிகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாண்டியா, நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான இப்போட்டிகளில் 171 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் சூரியகுமார் யாதவ், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 12ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் முஜூப் உர் ரஹ்மான், 14ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதுதவிர இலங்கைக்கெதிரான மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் அடில் ரஷீட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 11ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
8 minute ago
25 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
52 minute ago