Nirshan Ramanujam / 2017 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதலாம் இனிங்ஸில் இலங்கை அணி 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி தனது முதல் இனிங்ஸில் 487 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அந்த அணியின் சார்பாக ஷிகர் தவான் 119 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா 108 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 85 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லக்ஷான் சந்தகேன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 135 என்ற சொற்ப எண்ணிக்கையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 48 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 352 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ள இலங்கை அணி ஃபலோ ஒன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாடுகிறது.
49 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago