Shanmugan Murugavel / 2021 நவம்பர் 09 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேற்று அதிகாலை நடைபெற்ற மெக்ஸிக்க குரான் பிறீயை, றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன், முதலாவது வளைவிலேயே மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன், வல்ட்டேரி போத்தாஸை முந்தி பந்தயத்தை வென்றிருந்தார்.
இரண்டாமிடத்தை நடப்புச் சம்பியனான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் வென்ற நிலையில், மூன்றாமிடத்தை வெர்ஸ்டப்பனின் சக றெட் புல் அணி ஓட்டுநரான சேர்ஜியோ பெரேஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் புள்ளிகள் பட்டியலில் 312.5 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் வெர்ஸ்டப்பன் காணப்படுவதோடு, 293.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஹமில்டனும், 185 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பின்லாந்தின் போத்தாஸும் காணப்படுகின்றனர்.
25 minute ago
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago
49 minute ago