2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 23 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், காலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இந்த டெஸ்டின் நேற்றைய மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள், ஜேஸன் ஹோல்டர், கைல் மேயர்ஸின் இணைப்பாட்டத்தில் தமது இனிங்ஸை நகர்த்தியது.

இந்நிலையில், 45 ஓட்டங்களுடன் தனஞ்சய டி சில்வாவிடம் மேயர்ஸ் வீழ்ந்ததோடு, குறிப்பிட்ட நேரத்தில் 36 ஓட்டங்களுடன் ஹோல்டரும் பிரவீன் ஜெயவிக்கிரமவிடம் வீழ்ந்தனர்.

பின்னர் ரஹீம் கொர்ன்வோல் பெற்ற ஓட்டங்கள் காரணமாக பொலோ ஒன்னை மேற்கிந்தியத் தீவுகள் தவிர்த்த நிலையில், 39 ஓட்டங்களுடன் சுரங்க லக்மாலிடம் கொர்ன்வோல் வீழ்ந்தார்.

தொடர்ந்து மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுள்ளது. தற்போது களத்தில் ஜோஷுவா டா சில்வா 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது காணப்படுகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .