Editorial / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை, 2-0 என்றவாறு நியூசிலாந்து கைப்பற்றியது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்றதுடன், இரண்டாவது போட்டியில் மழை காரணமாக முடிவேதும் கிடைக்காத நிலையில், மெளன்ட் மகட்டேரேயில் இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் 119 ஓட்டங்களால் பாரிய வெற்றியைப் பெற்றே தொடரை வென்றுள்ளது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கொலின் மன்றோ 104 (53), மார்ட்டின் கப்தில் 63 (38) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 244 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், அன்றே பிளெட்சர் 46 (32) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், டிம் செளதி 3, இஷ் சோதி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் கொலின் மன்றோ தெரிவானார்.
37 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
5 hours ago
5 hours ago