Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 13 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்னாபிரிக்கா வென்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென். லூசியாவில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த டெஸ்ட், நேற்று இரவு முடிவுக்கு வந்திருந்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், அன்றிச் நொர்ட்ஜே (4), லுங்கி என்கிடி (5), ககிஸோ றபாடாவிடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 97 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, குயின்டன் டி கொக்கின் ஆட்டமிழக்காத 141, ஏய்டன் மர்க்ரமின் 60, றஸி வான் டர் டுஸனின் 46 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 4, ஜேய்டன் சியல்ஸ் 3, கேமார் றோச் 2, ரஹீம் கொர்ன்வோல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக றொஸ்டன் சேஸ் மாத்திரமே 62 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், றபாடா (5), நொர்ட்ஜே (3), கேஷவ் மஹராஜ்ஜிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களையே பெற்று இனிங்ஸ் மற்றும் 63 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக டி கொக் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025