Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, அன்டிகுவாவில் இலங்கை நேரப்படி இன்றிரவு ஏழு மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது டெஸ்டுடன் தொடங்குகின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்திலிருக்கும் இந்தியா, எட்டாமிடத்திலிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளையே இத்தொடரில் எதிர்கொள்ளப் போகின்றபோதும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் இரண்டாமிடத்திலிருந்த இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளையடுத்தே தொடரை இழந்தமை நிச்சயமாக இந்தியா இத்தொடரை மிகவும் கவனமாக அணுகுவதற்கு வழிவகுத்திருக்கும்.
அத்தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்வதற்கு காரணமான அல்ஸாரி ஜோசப் இல்லாதபோதும் கேமார் றோச், ஷனொன் கப்ரியல், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் இத்தொடரிலும் இடம்பெற்றிருக்கையில், அவர்களை எவ்வாறு சிறப்பாகக் கையாண்டு இந்திய அணியின் தலைவர் விராத் கோலி, செட்டேஸ்வர் புஜாரா உள்ளிட்ட இந்திய அணி ஓட்டங்களைப் பெறுகின்றது என்பதிலேயே இத்தொடரின் முடிவு தங்கியிருக்கின்றது.
இத்தொடரை வென்றால் அல்லது சமப்படுத்தினால் தரவரிசையில் ஏழாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் முன்னேறும் என்ற நிலையில், இத்தொடரின் எந்த முடிவும் இந்திய அணியின் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குள் இத்தொடரும் உள்ளடங்குகையில், இரண்டு அணிகளும் முதலாவது டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் இதுவென்ற நிலையில் இத்தொடரின் முடிவு மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரையில் ரஹீம் கோர்ண்வோல் இப்போட்டியில் அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகையில், இந்தியாவின் மேலதிகத் துடுப்பாட்டவீரராக அஜின்கியா ரஹானே, விக்கெட் காப்பாளராக றிஷப் பண்ட், சுழற்பந்துவீச்சாளராக இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago