Shanmugan Murugavel / 2016 மார்ச் 03 , மு.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த புதன்கிழமை (02) இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல், வெஸ்ட் ஹாம், ஸ்டோக், சுவான்சீ ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
மன்செஸ்டர் யுனைட்டெட், வட்ஃபோர்ட் அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை ஜுவான் மாத்தா பெற்றிருந்தார்.
இதேவேளை, லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியின் 34ஆவது, 41ஆவது, 57ஆவது நிமிடங்களில் முறையே அடம் லலானா, ஜேம்ஸ் மில்னர், ரொபேர்டோ பேர்மினோ ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், சுவான்சீ சிற்றி, ஆர்சனல் அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் சுவான்சீ சிற்றி அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ஆர்சனலின் ஜோயல் கம்பெல் ஒரு கோலினைப் பெற்றபோதும் போட்டியின் 32ஆவது, 74 ஆவது நிமிடங்களில் சுவான்சீ சிற்றியின் வெய்ன் றௌட்லெட்ஜ், ஆஷ்லி வில்லியம்ஸ் பெற்ற கோல்களின் மூலம் அவ்வணி வெற்றி பெற்றது.
இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 1-0 என்ற கோல்கணக்கில் நியூகாசிலை ஸ்டோக் தோற்கடித்ததுடன், டொட்டேன்ஹாம், 1-0 என்ற கோல்கணக்கில் வெஸ்ட் ஹாமிடம் தோல்வியடைந்திருந்தது.
14 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago