Shanmugan Murugavel / 2016 ஜூன் 27 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின், இறுதி 16 அணிகளுக்கான சுற்றின் இரண்டாவது நாளின் முடிவில், போட்டியை நடாத்தும் நாடான பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம் ஆகிய அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
பிரான்ஸ், அயர்லாந்துக் குடியரசு அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அதிரடி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே அயர்லாந்தின் ஷேன் லோங் மீது பிரான்ஸின் போல் பொக்பா பெனால்டி எல்லைக்குள் வைத்து விதிகளுக்கு மீறி நடந்து கொண்டமை காரணமாக அயர்லாந்துக்கு கிடைத்த பெனால்டியை றொபி பிராடி கோலாக்க, அவ்வணி முன்னிலை பெற்றது. அதன்பின்னர் முதற்பாதியில் மோசமாக செயற்பட்ட பிரான்ஸ், இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடி, அந்தோனி கிறீஸ்மன் மூலம் போட்டியின் 57, 61ஆவது நிமிடங்களில் பெற்ற கோல்களின் மூலம் 2-1 என்ற கோல்கணக்கில் இறுதியில் வெற்றி பெற்றது.
ஜேர்மனி, ஸ்லோவாக்கியா அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. ஜேர்மனி சார்பாக ஜெரோம் போட்டாங், மரியோ கோமிஸ், ஜூலியன் ட்ரக்ஸ்லர் ஆகியோர் கோல்களைப் பெற்றனர். எவ்வாறெனினும் போட்டியின் 14ஆவது நிமிடத்தில் ஜேர்மனிக்கு கிடைத்த பெனால்டியை மெசூட் ஒஸில் தவறவிட்டிருந்தார்.
இதேவேளை, பெல்ஜியம், ஹங்கேரி அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல்கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று காலிறுதிக்குள் தகுதி பெற்றுள்ளது. பெல்ஜியம் சார்பாக டொபி அல்டர்வெய்ட், மிஷி பட்ஷுயி, ஈடின் ஹஸார்ட், யன்னிக் கர்ரஸ்கோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர். தனது காலிறுதிப் போட்டியில், வேல்ஸை பெல்ஜியம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01) சந்திக்கவுள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago