2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

யூரோ 2016: வென்றது பெல்ஜியம்; போர்த்துக்கல்-ஒஸ்திரியா போட்டி சமநிலை

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 19 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் சனிக்கிழமை (18) இடம்பெற்ற போட்டிகளில் பெல்ஜியம் வெற்றி பெற்றதுடன், போர்த்துக்கல், ஒஸ்திரியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததோடு, ஐஸ்லாந்து, ஹங்கேரி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.

பெல்ஜியம், அயர்லாந்துக் குடியரசு ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் பெல்ஜியம் வெற்றிபெற்றது. பெல்ஜியம் அணியின் முதலாவது குழுநிலைப் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய றொமேலு லுக்காக்கு, இப்போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்றிருந்தார். இக்கோல்கள் தவிர, மற்றைய கோலினை அக்ஸ்ஸேல் விட்செல் பெற்றிருந்தார்.

போர்த்துக்கல், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான குழு எஃப் போட்டியில் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டி சமாநிலையில் முடிவடைந்திருந்தது. இப்போட்டியில் விளையாடியதன் மூலம், போர்த்துக்கல் சார்பாக 128ஆவது போட்டியில் விளையாடி, போர்த்துக்கல் சார்பாக அதிக போட்டிகளில் விளையாடிய லூயிஸ் பிகோவின் சாதனையை முறியடித்த, நட்சத்திரவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, போட்டியின் இரண்டாவது பாதியில் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பொன்றை தவறவிட்டிருந்தார்.

இதேவேளை, ஐஸ்லாந்து, ஹங்கேரி ஆகிய அணிகளுக்கிடையிலான மற்றைய குழு எஃப் போட்டியிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக இக்குழுவில் உள்ள நான்கு அணிகளும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .