Shanmugan Murugavel / 2016 ஜூன் 14 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் வென்றுள்ள நிலையில், அயர்லாந்துக் குடியரசு, சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
கடந்த இரண்டு முறை யூரோ சம்பியன்களான ஸ்பெயினும் செக் குடியரசும் மோதிய போட்டியின் 87ஆவது நிமிடத்தில், ஸ்பெய்னின் அன்றே இனியஸ்ட்டா கொடுத்த அருமையான பந்தை, தலையால் முட்டி ஜெராட் பிகே கோலாக்க, 1-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. முன்னதாக, ஸ்பெய்னின் அல்வரோ மொறாட்டா, ஜோர்டி அல்பா, டேவிட் சில்வாவின் கோல் பெறும் முயற்சிகளை, அபாரமாகச் செயற்பட்ட செக் குடியரசின் கோல்காப்பாளர் பீற்றர் செக் தடுத்திருந்தார். மறுகணம், அயர்லாந்துக் குடியரசின் விளாடிமிர் டரிடா, கோல் எண்ணிக்கையை சமப்படுத்த முயன்றபோது ஸ்பெயின் கோல்காப்பாளர் டேவிட் டீ கியா தடுத்திருந்தார்.
அடுத்து, அயர்லாந்துக் குடியரசு, சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் 48ஆவது நிமிடத்தில், அயர்லாந்துக் குடியரசின் வெஸ் ஹூலகன் பெற்ற கோலின் மூலம் அவ்வணி வெற்றி பெறும் நிலையில் இருந்தபோதும், மன்செஸ்டர் யுனைட்டெட்டுடன் இணையப் போகின்றார் எனக் கூறப்படும் சுவீடனின் நட்சத்திர வீரரும் அவ்வணியின் தலைவருமான ஸல்டான் இப்ராஹிமோவிக் அடித்த பந்தானது, அயர்லாந்துக் குடியரசின் கிரண் கிளார்க்கின் காலில் பட்டு ‘ஓவ்ண் கோல்’ ஆக மாற போட்டி சமநிலையில் முடிவடைந்தது. போட்டிக்கு முன்னர், ஜாம்பவானால் இன்னும் திறமையை வெளிப்படுத்த முடியும் என்று தெரிவித்த 34 வயதான இப்ராஹிமோவிக், போட்டியின் சில தருணங்களில் மட்டுமே ஜாம்பவானாக செயற்பட்டிருந்தார்.
இதேவேளை, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. இத்தாலி சார்பாக பெறப்பட்ட கோல்களை, இம்மானுவேலே ஜக்கேலினி, கிறேசியானோ பெலே ஆகியோர் பெற்றிருந்தனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago