2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

யூரோ 2016: ஸ்பெய்னை வென்றது குரோஷியா

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 22 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளில், ஸ்பெய்னை எதிர்கொண்ட குரோஷிய அணி வெற்றிபெற்றது. தவிர, போலந்து, ஜேர்மனி, துருக்கி அணிகளும் வெற்றிபெற்றன.

குரோஷிய அணிக்கும் ஸ்பெய்ன் அணிக்குமிடையிலான போட்டியில், 7ஆவது நிமிடத்திலேயே ஸ்பெய்னின் அல்வரோ மொராட்டா, கோலொன்றைப் பெற்று, அவ்வணிக்கு முன்னிலை வழங்கினார். ஆனால், முதலாவது பாதி முடியும் நேரத்தில், குரோஷியாவின் நிக்கொலா கலினிச், கோலொன்றை அடித்து, 1-1 என்ற கோல் கணக்கில் முதலாவது பாதியை நிறைவுசெய்தார்.

போட்டியின் 72ஆவது நிமிடத்தில், ஸ்பெய்னின் சேர்ஜியோ றாமோஸூக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, எதிரணியின் கோல் காப்பாளர் தடுத்திருந்த நிலையில, 87ஆவது நிமிடத்தில் இவன் பெரிசிச்சால் பெறப்பட்ட கோல், குரோஷியாவுக்கான வெற்றிக் கோலாக மாறியது.

துருக்கிக்கும் செக் குடியரசுக்கும் இடையிலான போட்டியில், துருக்கிக்கு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கிடைத்தது. 10ஆவது நிமிடத்தில் புரக் யில்மாஸூம் 65ஆவது நிமிடத்தில் ஒஸான் துபானும் கோல்களைப் பெற்றனர்.

ஜேர்மனிக்கும் வட அயர்லாந்துக்குமிடையிலான போட்டியில், ஜேர்மனிக்கு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கிடைத்தது. 30ஆவது நிமிடத்தில் மரியோ கோமெஸ், கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போட்டியில், போலந்து அணியின் ஜாகுப் பிளாஸ்சிகொவ்ஸ்கி பெற்ற கோலினால், அவ்வணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டிகளின் முடிவில் போலந்து, வட அயர்லாந்து அணிகள், 16 அணிகள் பங்குபற்றும் சுற்றுக்குத் தகுதிபெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .