Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 22 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், யூனியன் பேர்லினின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 1-2 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ப்ஸிக் தோற்றது.
லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜஸ்டின் க்ளூய்வேர்ட் பெற்றதோடு, யூனியன் பேர்லின் சார்பாக, மர்வின் பிறைட்றிச், மக்ஸ் க்றூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, வொல்வ்ஸ்பேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், மைன்ஸுக்குமிடையிலான போட்டியில், 2-3 என்ற கோல் கணக்கில் வொல்வ்ஸ்பேர்க் தோற்றது. வொல்வ்ஸ்பேர்க் சார்பாக, மக்ஸிமில்லியன் பிலிப், ஜோவோ விக்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மைன்ஸ் சார்பாக, ஜீன்-போல் பொய்டஸ், றொபின் குவைஸன், ஸ்டெஃபன் பெல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், பெயார் லெவர்குசனுக்குமிடையிலான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் டொட்டமுண்ட் வென்றது. டொட்டமுண்ட் சார்பாக, எர்லிங் பிறோட் ஹலான்ட் இரண்டு கோல்களையும், மார்கோ றொய்ஸ் ஒரு கோலையும் பெற்றனர். லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லார்ஸ் பென்டர் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago