Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 22 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோப்பா லீக் தொடரில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சம்பியனானது.
ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிக் பில்பாவோவின் மைதானத்தில் வியாழக்கிழமை (22) அதிகாலை நடைபெற்ற இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே 17 ஆண்டுகளின் பின்னர் தொடரொன்றில் டொட்டென்ஹாம் சம்பியனானது.
டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை பிரென்னன் ஜோன்சன் பெற்றிருந்தார்.
சம்பியனானதன் மூலம் சம்பியன்ஸ் லீக் தொடரில் தமதிடத்தை டொட்டென்ஹாம் உறுதிப்படுத்திக் கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago