Shanmugan Murugavel / 2016 ஜனவரி 10 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் லா லிகாத் தொடரில், கடந்த சனிக்கிழமை (09), இடம்பெற்ற போட்டிகளில் ரியல் மட்ரிட், பார்சிலோனா ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
ரியல் மட்ரிட்டின் பயிற்சியாளராக ஸினேடி ஸிடான் பதவியேற்ற பின் முதலாவது போட்டியாக, டெப்போடீவோ டீ லா கொருண்யாவுடன் ரியல் மட்ரிட் மோதியிருந்த நிலையில், ரியல் மட்ரிட் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் 15ஆவது மற்றும் 90ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்ற கரீம் பென்ஸீமா, ரியல் மட்ரிட்டுக்காக 100ஆவது கோலைப் பெற்றதோடு, போட்டியின் 22, 49, 63ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்ற கரித் பேல், ஹட்ரிக் கோலையும் பூர்த்தி செய்திருந்தார். இந்நிலையில், தற்போது 40 புள்ளிகளைப் பெற்றுள்ள ரியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள பார்சிலோனாவை விட இரண்டு புள்ளிகளே குறைவாகப் பெற்றுள்ளது.
இதேவேளை, பார்சிலோனாவுக்கும் கிரனடாவுக்குமிடையிலானா மற்றொரு லா லிகாப் போட்டியில், பார்சிலோனா, 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், 8, 14, 58 ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்று ஹட்ரிக் கோலை லயனல் மெஸ்ஸி பூர்த்தி செய்ததோடு, போட்டியின் 83ஆவது நிமிடத்தில் நேமர், ஒரு கோலைப் பெற்றிருந்தார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago