Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பு லா லீகா தொடரில் பார்சிலோனா அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வீழ்த்தி உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி எல் கிளாசிகோ என அழைக்கப்படுகிறது.
இந்த போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் பகுதியில் உள்ள சான்டியாகோ பெர்னாபு மைதானத்தில் நடைபெற்றது.
ஸ்பெயின் நாட்டில் கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் தொடர் தான் லா லீகா. கடந்த 1929 முதல் நடத்தப்பட்டு வரும் தொடராகும் தற்போது, 2022-23 சீசனுக்கான தொடர் 92-வது சீசனாகும். மொத்தம் 85 போட்டிகள். இதுவரையில் நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
இந்நிலையில், இந்த இரண்டு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்தன. இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகளை ‘எல் கிளாசிகோ’ என அறியப்படுகிறது. கால்பந்தாட்ட உலகில் கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிகளில் இது மிகவும் பிரபலமான போட்டியாகும்.
இதில் இரண்டு அணிகளும் விளையாடின. மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். அதோடு உலகம் முழுவதும் சில நாடுகளில் இந்த போட்டி சிறப்பு காட்சியாக நேரலையில் ஒளிபரப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago