Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டுக்கான றைடர் கிண்ணத்தை, ஐக்கிய அமெரிக்க அணி கைப்பற்றியுள்ளது. ஐரோப்பிய அணியை 17-11 என்ற புள்ளிகள் கணக்கில் தனிநபர் போட்டிகளில் தோற்கடித்தே, சம்பியன் பட்டத்தை, ஐக்கிய அமெரிக்க அணி பெற்றுக் கொண்டது.
ஐரோப்பாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான ஆண்களுக்கான கோல்ப் தொடரான றைடர் கிண்ணத் தொடர், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மாறி மாறி இடம்பெறுவது வழக்கமாகும். இம்முறை போட்டிகள், அமெரிக்காவின் மினிசோடாவில் இடம்பெற்றன.
செப்டெம்பர் 30ஆம் திகதி ஆரம்பித்த இப்போட்டிகள், ஒக்டோபர் 2ஆம் திகதிவரை இடம்பெற்றன. இதில், ஒற்றையர் போட்டிகளில் காணப்பட்ட 12 போட்டிகளில் 7 போட்டிகளை வென்ற அமெரிக்க அணி, 17-11 என்ற புள்ளிகள் கணக்கில் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
2008ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்தக் கிண்ணத்தை அமெரிக்கா கைப்பற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago